புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

img

ஓய்வூதியத்தையும், ஓய்வூதியர்களையும் காப்போம் அஞ்சல் ஆர்எம்எஸ் ஒய்வூதியர் மாநாடு உறுதி

மதுரை, பிப்.23- ஓய்வூதியத்தையும், ஓய்வூதியர்களையும் காப்பதே எங்களது முதற்கடமை என அனைத் திந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் அமைப்பின் ஆலோசகர் கே.வி.ஸ்ரீதரன் கூறினார் அனைத்திந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் அமைப்பின் நான்காவது மாநில மாநாடு மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது. ஞாயி றன்றும் மாநாடு நடைபெறுகிறது. அமைப்பின் ஆலோசகர் கே.வி.ஸ்ரீதரன், மாநிலத் தலைவர் எம்.கண்ணையன், சீனு பிரம்மநாய கம், கே.ஆர்.ராகவேந்திரன், மாநில உதவிச் செயலா ளர் எஸ்.அப்பன்ராஜ் உட்பட தமிழகம் முழுவது மிருந்து பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ள னர். மாநாட்டை வாழ்த்தி மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசினார். மாநாடு குறித்து கே.வி.ஸ்ரீதரன் செய்தியாளர்களி டம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் 24 ஆயிரம் அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர்கள் உள்ளனர். எங்களது பிரதான கோரிக்கை பழைய பென்சன் திட்டத்தை வழங்க வேண்டும். ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசியாக பெற்ற சம்பளத்தில் 60 சதவீதம் பென்சனாக வழங்க வேண்டும். ஏழா வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஓய்வூதி யர்கள் படிநிலைகளோடு ஒப்பிட்டு அமுல்படுத்த வேண்டும். மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து ஓய்வூதியர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். ஓய்வூதியர் மீதான தாக்குதல் உலகளாவி யது. இதைத் தடுத்து நிறுத்த விரிந்து பரந்த ஒற்றுமை அவசியம்.  மேலும் அவர் கூறுகையில், 2009-ஆம் ஆண்டு மத்திய அரசு கிராமப்புற அஞ்சலகங்ளை மூட மாட்டோம் எனக்கூறியது. ஆனால் படிப்படி யாக மூடி வருகிறது. இது கண்டனத்திற்குரி யது. கொரியர் சேவையால் அஞ்சல் சேவை பாதிக்கவில்லை. வணிக ரீதியாக அஞ்சல் துறை வளர்ந்திருக்கிறது. மக்கள் அஞ்சல் துறை மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர்.  இதர தொழிலாளி வர்க்க இயக்கங்களிலும் அனைத்திந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஊழியர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ள னர். தொழிலாளி வர்க்கம் வெற்றியடையும் போது எங்களது கோரிக்கைகளும் வெற்றியடை யும். ஓய்வூதியத்தையும், ஓய்வூதியர்களையும் காப்பதே எங்களது தலையாய பணி என்றார். மாநாட்டுப் பிரதிநிதிகளிடம் பேசியபோது, ஆளும் அரசுகள் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நலன்களை பாதுகாப்பதற்காக தொழிலாளர் நலனை பலியாக்குகின்றன. போராடிப் பெற்ற உரிமைகள் நிர்மூலமாக்கப்படுகிறது. பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலாளர்கள் உரிமைகள் மீதான தாக்குதல் தீவிர மடைந்துள்ளது. குறிப்பாக அரசுத்துறை, பொதுத் துறையை கண்மூடித்தனமாக தனியார் மயமாக்கு கிறது. எந்தக் குடிமகனும் நிம்மதியாக, அமைதி யாக வாழ முடியவில்லை. இந்திய தொழிலாளி வர்க்கம் முன்வைக்கும் எந்தக் கோரிக்கையையும், ஆலோசனையையும் பரிசீலிக்க அரசு மறுத்துவரு கிறது.

;