திங்கள், அக்டோபர் 26, 2020

மாவட்டங்கள்

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

 தேனி, ஜூலை 7- முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து 193 கன அடியிலிருந்து 286 கன அடியாக அதிகரித்துள்ளது. தென் மேற்கு பருவமழை தாமதமான தால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் படவில்லை. மேலும் குடிநீருக்காகவும் பொதுமக்கள் அலையும் நிலை ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் மழை தொடர்ந்து போக்கு காட்டியே வருகிறது. 2 நாட்களாக சாரல் மழை தொடர்ந்து வரு கிறது. முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 112.30 அடியாக உள்ளது. 193 கன அடியாக இருந்த நீர்வரத்து 286 கன அடியாக உயர்ந்துள்ளது . அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

சரிந்து வரும் வைகை அணை 

தொடர்ந்து நீர்வரத்தின்றி வைகை அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது . சனிக்கிழமை காலை நிலவரப் படி அணையின் நீர்மட்டம் 29.92  அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடி நீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35.70 அடியாக உள்ளது. நீர்வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 68.55 அடியாக உள்ளது. வரத்து 7 கன அடி . 13 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு -35.8, தேக்கடி- 3.6  மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது.
 

;