திங்கள், அக்டோபர் 26, 2020

மாவட்டங்கள்

நீலகிரி: விண்ணப்பித்த அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கிடுக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

உதகை, அக். 18 - கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில்  விண்ணப்பித்த அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வாசு நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ் யாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது, நீலகிரி மாவட்டம், கூட லூர் மற்றும் பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட வீடுகளுக்கு பல ஆண்டுகளாக இன்ற ளவும் மின் இணைப்பு இல்லை. தற்போது கொரோனா பொதுமுடக்க காலத்தில் வீடுகளிலேயே இருந்து ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் மாணவ, மாணவியர்களும் மின் இணைப்பு இல்லாமல் பாதிக்கப் படுகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப் ரல் 24, மே 3, 11 மற்றும் ஜூலை 7 ஆகிய தேதிகளில் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா வருவாய் கோட்ட பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் பேர் தங்களது வீடுக ளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கூடலூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் வாரிய பொறியாளர்களிடம்  நேரில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். ஆனால், இந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட் டதா? அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா? என்ற தகவலை விண்ணப்பதாரர்களுக்கு முறையாக தெரிவிக்கவில்லை. மின் இணைப்புக்கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது ஒரு வார காலத்தில் மின் இணைப்பு வழங்க வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாட்க ளுக்கும் ரூ.1000 அபராதமாக மின்வாரி யம் விண்ணப்பதாரர்களுக்கு வழங்க வேண் டும் என இந்த ஆண்டு ஜனவரி 29 -ல் வெளி யிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில் குறிப் பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அனைவருக்கும் மின் இணைப்பு வழங் கிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

;