ஞாயிறு, அக்டோபர் 25, 2020

மாவட்டங்கள்

அபாயகரமான கட்டிடங்கள் குறித்து புகார் அளிக்கலாம் - நீலகிரி ஆட்சியர்

உதகை,  செப். 19- நீலகிரியில் அபாயகரமான கட்டிடங்கள் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது,

வட கிழக்கு பருவமழையின் தாக்கம் நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளது. அதனடிப் படையில் மாவட்ட முழுவதும் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மேற்கொள்ளப் படவுள்ளது.

அதன்ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிதலமடைந்த அபாயகரமான நிலையில் உள்ள கட்டி டங்கள், இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள், அபாய கரமான மரங்கள் மற்றும் தாழ்வழுத்த மின்கம்பிகள் ஆகிய வற்றின் விபரங்களை உடனடியாக மாவட்ட அவசரகால மையத்தில் தெரியப்படுத்த வேண்டும்.  அதற்காக, செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் இலவச தொலைபேசி எண் 1077 - க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.  

மேலும்,  வரு வாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்க ளிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. உதகை கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத் திற்கு 0423-2206002 ,கூடலூர் கோட்டத்திற்கு 04262-261295 ,உதகை வட்டத்திற்கு 04232442433 ,குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூட லூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொது மக்கள் தகவல்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரி வித்துள்ளார்.

;