திங்கள், செப்டம்பர் 21, 2020

மாவட்டங்கள்

இ பாஸ் கிடைக்காததால் மன உளைச்சலில் அரசு ஊழியர்கள்

உதகை, ஆக.8-  நீலகிரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்க ளுக்கு இ பாஸ் கிடைக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அரசுத்துறை அலுவலகங்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இவர்கள் கடந்த ஐந்து மாதங்களாகக் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வழியில்லா மல் இங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க இ பாஸ் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட தாகத் தெரிகிறது. இதனால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச் சலுடன் பணிபுரிந்து வருவதால், தங்களுக்கு மாவட்ட நிர்வா கம் மாதத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தைச் சென்று பார்த்து வர அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டு மென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

;