வெள்ளி, அக்டோபர் 30, 2020

மாவட்டங்கள்

img

ஜனநாயகம், மதச்சார்பின்மையை பாதுகாப்போம் - சமத்துவ இந்தியாவை படைக்க சூளுரைப்போம் கம்யூனிச இயக்க நூற்றாண்டு விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

நாமக்கல், அக்.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா சனியன்று நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தி லுள்ள தனியார் திருமண மண்டபத் தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதேச செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கவுண்டம்பா ளையம் கிளை செயலாளர் பி.காளி யப்பன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் காணொளி வாயி லாக சிறப்புரையாற்றி பேசுகையில், இந்தியாவில் நூற்றாண்டு காணும் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்திய விடு தலைப் போராட்டத்தில் அளப்பரிய தியாகம் செய்த பெருமைமிகு இயக்க மாகும்.

விடுதலை இந்தியாவில் விவ சாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் கோரிக்கை களை முன்வைத்து தொடர்ந்து போராடி வரும் இயக்கமாகும். இன்றைய பாஜக ஆட்சியில் நாடு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிற.து. சொல்லொண்ணா துன்ப துயரங்க ளுக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகி றார்கள். மத்திய மோடி அரசு தனியார் மய, தாராளமய, கார்ப்பரேட் கொள் கைகளை மிக வேகமாக இந்தியாவில் அமலாக்கி வருகிறது. அதற்காக இந் திய ஜனநாயகத்தை கேள்விக்குறி யாக்கி, நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி பல சட்ட திருத்தங் களை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றி வருகிறது. குறிப்பாக, காஷ் மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பறிப்பா னது, இந்திய மக்கள் மத்தியில் ஜன நாயகத்தின் மீதான நம்பகத் தன் மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.  

இதேபோல், இந்தியாவில் நீதி மன்றத் தீர்ப்புகளில் நீதியை தேடும் நிலைமைக்கு இந்திய மக்கள் தள்ளப் பட்டுள்ளார்கள். மறுபுறம், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டதன் மூலம் இந்திய மதச்சார்பின்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அண்மை யில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண்மை சட்டங்கள் மூலம் இந்திய விவசாயிகள், கார்ப்ப ரேட் முதலாளிகளால் பெரும் சூறை யாடலுக்கு உள்ளாகப் போகிறார்கள். இச்சட்டத்தால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள விவசாயிகளின் தன்னெ ழுச்சியான போராட்டங்களில் இருந்து மோடி அரசு பாடம் கற்க மறுக்கிறது. இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக் களுக்கு துரோகம் இழைக்கும் அரசாக மத்திய அரசு மாறிப் போயுள்ளது.

தமி ழகத்தில் ஆளும் அதிமுக அரசு மத்திய பாஜக அரசின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் துணை போகிறது. ஆகவே, நூற்றாண்டு காணும் இந் திய கம்யூனிஸ்ட் இயக்கம் அதன் வர லாற்று வழித்தடத்தில் இருந்து இந்தி யாவில் ஜனநாயகம், மதச்சார் பின்மை, மக்கள் ஒற்றுமையை பாது காத்து சமத்துவ இந்தியா படைக்க சூளு ரைப்போம். இவ்வாறு ஜி.ராமகிருஷ் ணன் பேசினார்.  முன்னதாக, ஆர்.கவுண்டம்பாளை யம் பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி செங்கொடியை ஏற்றி வைத்தார். இவ் விழாவில், கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாயி அண்ணாதுரை  உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். நிறை வாக பிரதேச குழு உறுப்பினர் எஸ். ராமலிங்கம் நன்றி கூறினார்.

;