மாவட்டங்கள்

img

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்.செப்.18- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கல்லங்காட்டு வலசு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை ஆகியவற்றை ரத்து  செய்யக்கோரியும், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்க ளுக்கு நீதி கேட்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றி யம், கல்லங்காட்டுவலசு பகுதியில் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலை வர்.எம்.செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், இந்திய மாணவர் சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் தங்கமணி மற்றும் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;