திங்கள், அக்டோபர் 26, 2020

மாவட்டங்கள்

img

இடிந்து விழும் நிலையில்  மாதிரவேளூர் வி.ஏ.ஓ அலுவலகக் கட்டிடம் புதிய கட்டிடம் கட்டப்படுமா?

சீர்காழி: சீர்காழி அருகே மாதிரவேளூர் வி.ஏ.ஓ அலுவலகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேளூர் வி.ஏ.ஓ அலுவலகம் கடந்த 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கட்டிடம் தரமற்ற நிலையில் கட்டப்பட்டதாலும், மழைக்காலங்களில் கட்டிடத்திற்குள் மழை நீர் புகுந்து தேங்கியிருந்ததாலும் திறக்கப்பட்ட இரண்டு வருடங்கள் மட்டுமே இங்கு அலுவலகம் இயங்கியது. அதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.  இதுவரை தனியாருக்குச் சொந்தமான நான்கு இடங்களுக்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. மாதிரவேளூரில் பல கிராம நிர்வாக அலுவலர்கள் இங்கு பணிபுரிந்துள்ளனர். ஆனால் இதுவரை வி.ஏ.ஓ அலுவலகத்துக்கு கட்டிடம் புதியதாகக் கட்டவில்லை. இந்தக் கட்டிடம் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. புதிய கட்டிடம் கட்டுவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக பழைய அலுவலகக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

;