சனி, செப்டம்பர் 26, 2020

மாவட்டங்கள்

img

வாய்க்காலை தூர்வாராததால் 40 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியது

சீர்காழி, டிச.8- சின்னகொப்பியம் கிராமத்தில் மழையின் காரணமாக  40 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி யது. வாய்க்கால் தூர்வாராததால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே சின்னகொப்பியம் கிரா மத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த மழையின் கார ணமாக 40 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. மழை பெய் வது தற்பொழுது குறைந்து காணப் பட்டாலும் வயலில் தேங்கிய மழை நீர் எளிதில் வடியவில்லை.  பன்னங்குடி, அழகாபுரம், திரு ஞானசம்பந்தம், ஆலாலசுந்தரம், கண்ணபிராண்டி, சின்னகொப்பி யம் ஆகிய கிரமங்களில் உள்ள ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்க ளுக்கு பாசன மற்றும் வடிகாலாக இருந்து வரும் அரியலூர் வாய்க் கால் தூர்வாராமல் விடப்பட்டதால் வயலில் தண்ணீர் தேங்கி வாய்க் கால் மூலம் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரியலூர் வாய்க் காலும் சில இடங்களில் மூழ்கியுள் ளது.  இது குறித்து சின்னகொப்பியம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், அரியலூர் வாய்க் கால் இப்பகுதியின் நிலங்களுக்கு முக்கிய பாசன மற்றும் வடிகாலாக இருந்து வருகிறது. இந்த வாய்க் கால் சின்னகொப்பியம் கிராமத்திலி ருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிட்டியணை உப்பனாற்றில் கலக்கிறது. இந்த அரியலூர் வாய்க் கால் முறையாக தூர்வாரவில்லை. இதனால் வாய்க்காலில் செடி மற்றும் புதர்கள் மண்டியும் வாய்க்காலின் ஆழம் குன்றியும் உள்ளதால் தண்ணீர் எளிதில் சென்று வடியவில்லை. தொடர்ந்து மழை பெய்தால் இன்னும் பல ஏக்கர் சம்பா நேற்பயிர் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளதால் உடனடியாக அரியலூர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்றனர்.

;