செவ்வாய், செப்டம்பர் 29, 2020

மாவட்டங்கள்

தூத்துக்குடி, நாகர்கோவில் முக்கிய செய்திகள்

பக்ரீத்: ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தூத்துக்குடி, ஆக.11-பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரத்தில் சனியன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ. 7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.  தென்தமிழகத்தில் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச் சந்தை சனிக்கிழமைதோறும் கூடுவது வழக்கம். இங்கு தூத்துக்குடி மாவட்டத்தினர் மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு வளர்ப்போரும் வருவர். திங்களன்று (ஆக. 12) பக்ரீத் பண்டிகை என்பதால் எட்டயபுரம் சந்தைக்கு 10 ஆயி ரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதையடுத்து விவசாயிகள், ஆடு வளர்ப்போர், வியா பாரிகள் உள்ளிட்டோர் சந்தையில் குவிந்தனர். அதிகாலை 5 மணியளவில் தொடங்கிய சந்தை பிற்பகல் 1 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.  ஆடுகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி யது. காலை முதலே ஆடுகள் விற்பனை வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது. கோவில்பட்டி, விளாத்திகுளம், சாயல்குடி, ராமநாதபுரம், கமுதி, பரமக்குடி, அருப்புக் கோட்டை, சாத்தூர், சிவகாசி, விருதுநகர், இராஜபாளை யம், திருமங்கலம், தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, தேவாரம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்க வெள்ளிக்கிழமை இரவு முதலே மினி லாரி, சுமை ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களு டன் குவிந்தனர். 10 கிலோ முதல் 12 கிலோ வரை எடை யுள்ள வெள்ளாடு ரூ. 8 ஆயிரத்துக்கும் செம்மறி ஆடுகள் ரூ. 12 ஆயிரம் வரையும் விற்பனையாகின. இஸ்லாமி யர்கள் செம்மறி ஆடுகளை அதிகளவில் விரும்பி வாங்கி யதால் அவற்றுக்கு சந்தையில் கடும் போட்டி இருந்தது. இதுகுறித்து மேலப்பாளையத்தைச் சேர்ந்த அப்துல் கூறுகையில் இந்தமுறை எட்டயபுரம் சந்தைக்கு நல்ல தரமான ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது. அதேபோல மக்கள் கூட்டமும் வியாபாரிகள் கூட்டமும் அதிகமாக இருந்தது என்றார். தேவாரத்தைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி முத்துபாண்டி கூறுகையில் சனியன்று நடைபெற்ற சந்தை யில் ஆடுகளின் விற்பனை இருமடங்காக அதிகரித்தது. சுமார் ரூ.7 கோடிக்கு ஆட்டு வர்த்தகம் நடைபெற்றுள் ளது. இது கடந்த ஆண்டைவிட அதிகம். இதனால் ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.

மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் திருட்டு இரண்டு பேர் கைது
தூத்துக்குடி, ஆக.11- தூத்துக்குடியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் திருடியதாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட னர்.  தூத்துக்குடி பிரையண்ட் நகர் 3வது தெருவை சேர்ந்த வர் கனகமணி மகன் தனபால் (48). இவர் சந்தை ரோட்டில் மளிகைகடை நடத்தி வருகிறார். இவரது கடை யில் கடந்த ஜூலை 25ம் தேதி மர்மநபர்கள் பின்புற பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த சுமார் ரூ. 45 ஆயிரம் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட் ஆகியவற்றினை திருடி சென்றுள்ளனர்.  இதுகுறித்து தென்பாகம் காவல்நிலையத்தில் தனபால் அளித்த புகாரின் பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையா முதலியார்புரம் 2ம் தெருவை சேர்ந்த குமார் மகன் ராஜ்குமார் (19) தாமோதரன் நகரை சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (18) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

வழக்கறிஞர் வெட்டிக்கொலை: ஒருவர் கைது                                                                                                                                                                                                                                                                                                                                                      தூத்துக்குடி, ஆக.11-  தூத்துக்குடி முறப்பநாடு அருகேயுள்ள சென்னல் பட்டி கிராமம் தெற்குதெருவை சேர்ந்தவர் சண்முகவேல் மகன் வேல்முருகன் (27). வழக்கறிஞராக உள்ளார். இவ ருக்கும் இவரது உறவினர் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு சண்முகவேல் மகன் செல்வம் என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக தெரி கிறது. ஞாயிறன்று காலை சுமார் 9.30 மணியளவில் செல்வம் வேல்முருகனிடம் நிலப்பிரச்சனை தொடர்பாக தகராறு செய்ததாகவும் தகராறு முற்றவே கோபமான செல்வம் வேல்முருகனை அரிவாளால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்த தகவல் கிடைத்ததும் முறப்பநாடு போலீ சார் சம்பவஇடத்துக்கு சென்று வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து விசா ரணை நடைபெற்று வருகிறது.

7 வேட்டை நாய்களுடன் முயல்வேட்டை  மூன்று பேருக்கு  தலா ரூ.19ஆயிரம் அபராதம்
நாகர்கோவில், ஆக.11-குமரி மாவட்டம், பூதப்பாண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி, குமாரபுரம் உள்ளிட்ட பகுதி யில் வேட்டை நாய்களை வைத்து, சிலர் காட்டு முயல்களை வேட்டையாடுவதாக, வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  மாவட்ட வன அலுவலர் ஆனந்த் உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன், வனவர் புஷ்பராஜா, வனக்காப்பாளர்கள் விஜயகுமார், துரை ராஜ், வேட்டை தடுப்பு காவலர்கள் இந்திரன், தனீஸ், சபரி, ஜெகன், ராஜபாலன் ஆகியோர் கொண்ட குழு வினர், சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர்.  அப்போது நாய்களை கொண்டு முயல் வேட்டையில் ஈடுபட்ட நபர்கள் தப்பியோடினர். அவர்களை வனத் துறையினர் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஆவரைகுளத்தை சேர்ந்த இந்திரன் (49), ராமகிருஷ்ணன் (26), கேசவன் (29) என தெரியவந்தது. கூலி வேலைக்கு செல்லும் இவர்கள் விடுமுறை நாட்களில் வேட்டை நாய்களுடன் வேட்டைக்கு செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 பேருக்கும் தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் ரூபாய் 30 ஆயி ரம் அபராதம் விதிக்கப்பட்டது.  மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய 7 நாய்கள், 2 காட்டு முயல்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்த னர். இந்த நாய்களை வேட்டைக்கு மீண்டும் பயன் படுத்தாமல் இருக்க புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்ப டைக்க இருப்பதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

;