திங்கள், செப்டம்பர் 21, 2020

மாவட்டங்கள்

img

வாய்க்காலின் நீரோட்டத்தை தடுத்ததால் போதிய நீரில்லாமல் கருகிய பயிர்கள்: விவசாயி வேதனை

திருவாரூர், ஆக. 12- திருவாரூர் மாவட்டம், நன்னிலம்  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடவா சல் வட்டம், கீழப்பாலையூரைச் சேர்ந்த விவசாயி கருணாநிதி, 8  ஏக்கர் நிலத்தில் கோ-51 ரக நெற்ப யிரை சாகுபடி செய்திருந்தார். இதற்கு போதிய நீர் வரத்து இல்லாத தால் பயிர் முற்றிலுமாக கருகி பய னற்று போய்விட்டது. இதனால் விவ சாயி கருணாநிதி பெரும் மன உளை ச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து அவர் தீக்கதிர் செய்தி யாளரிடம் கூறுகையில், கடந்த ஜூன்  6 அன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழக முதல்வரும் பொதுப்ப ணித்துறையும் ‘இந்த ஆண்டு விவ சாயிகளுக்கு தண்ணீர் பிரச்சனை இரு க்காது’ என்று கூறியதன் விளைவாக நம்பிக்கையுடன் சாகுபடி பணியில் ஈடுபட்டேன். மின் மோட்டார் வசதி இல்லாததால் ஆற்றுப்பாசனம் மட்டுமே ஆதாரம்.  இந்நிலையில் பயிருடன் சேர்ந்து  களை மண்ட தொடங்கியதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது  என்ற நம்பிக்கையில் களைக்கொ ல்லி தெளிக்கப்பட்டது. இந்த சூழ லில் திடீரென்று நீர் வரத்து நின்று போனதால் களையுடன் சேர்ந்து பயி ரும் கருகிவிட்டது.

ஆங்காங்கே மின்மோட்டார் வசதியுள்ள விவசாயி கள் சிரமமின்றி சாகுபடி செய்தபோது  அந்த வசதி இல்லாத எனக்கு பெரும்  சேதம் ஏற்பட்டது என்றார் வேதனையு டன். இதற்கான காரணம் என்ன வென்று ஆய்வு செய்தபோது, கீரந்த ங்குடி இலையூர் சாலையில் மாரிய ம்மன் கோவில் அருகில் வாய்க்கா லில் பாலம் கட்டும் பணி நடைபெற்றுக்  கொண்டிருந்த போது அப்பணி தடை படக்கூடாது என்பதற்காக வாய்க்கா லின் நீரோட்டம் ஒப்பந்தக்காரர்களால் தடுக்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்த  பிறகே தண்ணீர் திறந்து விடப்பட்டு ள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் கீழப்பாலையூர் ஊராட்சியில் வெட்டாறு மூலம் பாசனம் பெரும் வாய்க்கால்களில் நீர் இல்லாததால் விவசாயி கருணாநிதியின் நிலம் முற்றிலுமாக நீரின்றி காய்ந்துள்ளது. இதனாலேயே இந்த இழப்பு அவ ருக்கு ஏற்பட்டுள்ளது.  மற்ற விவசாயிகளை போலவே இவரும் வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்து விவசாய பணிக்கு பணம் செலவழித்துள்ளார். மேலும் பயிர் இன்சூரன்ஸ் தொகையும் தொ டர்ச்சியாக கட்டி வருகிறார். இந்நிலை யில் பாதிப்பிற்குள்ளாகி மன உளை ச்சலில் உள்ள விவசாயி கருணாநிதி,  அரசு தனக்கு இழப்பீடு தர வேண்டும்  என கோரிக்கை வைத்துள்ளார்.  

இவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பி ற்கு அரசு பொறுப்பேற்குமா? பாலம்  கட்டிய துறை அல்லது ஒப்பந்தக்கா ரர் பொறுப்பேற்பாரா? என்பது முக்கி யமான கேள்வி. விவசாய சாகுபடி பணிக்காலங்களில் மேட்டூர் அணை யில் இருந்து தண்ணீர் திறப்பதும், அதே நேரத்தில் பாலம் கட்டுவது, சிறு மதகுகள் கட்டுவது, தடுப்ப ணைகள் கட்டுவது என பொதுப்பணி த்துறைகள் அவசர கதிகளில் பணி களைச் செய்வதும், விவசாயிகள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை பொருட்படுத்தாததும் தொ டர்கிறது.  எதிர்காலத்தில் இந்த நடை முறைகள் முற்றிலுமாக கைவிட ப்பட்டு கருணாநிதி போன்ற விவ சாயிகள் பாதிக்கப்படாமல் பாதுகா க்கப்பட வேண்டும். திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் என மூன்று மாவட்டங்களுக்கும் அமை ச்சர்கள் இருக்கும்போது அதிலும் குறி ப்பாக உணவுத்துறை அமைச்சரும், வேளாண்துறை அமைச்சரும் உள்ள போது இப்பகுதி விவசாயிகள் துய ரத்தில் தள்ளப்படலாமா என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உணர வேண்டும்.  கீழப்பாலையூர் விவசாயி கரு ணாநிதிக்கு உரிய இழப்பீடு கிடைப்ப தற்கு மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

;