சனி, செப்டம்பர் 26, 2020

மாவட்டங்கள்

img

விவசாயிகளை பாதிக்கும் அவசர சட்டங்களை திரும்ப  பெறுக

விவசாயிகளை பாதிக்கும் அவசர சட்டங்களை திரும்ப  பெற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புதனன்று அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப் புக்குழு மற்றும் இலவச மின்சார பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் கையெழுத்து இயக்க நடைபெற்றது. இதில்,  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனண், மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம்,  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம்,  திமுக மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகி ருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் கோவிந்தராஜ்  உள்ளிட்ட தோழமை கட்சிகளைச்  சேர்ந்த ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.  இதேபோல், செங்கப்பள்ளியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டச் செய லாளர் சின்னசாமி,  போராட்ட இயக்க மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆர்.குமார், காங்கிரஸ் பழனிச்சாமி, மதிமுக  ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், திமுக ஈஸ்வரமூர்த்தி,  விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய செயலா ளர் கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;