ஞாயிறு, அக்டோபர் 25, 2020

மாவட்டங்கள்

img

பாறைக்குழிகளை மூடக்கோரி காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர், செப். 30 – திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் பாறைக்குழிகளை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் வெள்ளியங்காடு நான்கு சாலை சந்திப்பில் பொது மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 50 ஆவது வார்டு வெள்ளியங்காடு மற்றும் கே.எம் நகர் பகுதியில் உள்ள பாறைக்குழியால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இதே போல், மழைக்காலங்களில் மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்து பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஆகவே, இந்த பாறைக்குழிகளை மூட வலியுறுத்தி பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,  புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப் பகுதி பொதுமக்கள் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

 இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், தெற்கு மாநகரக் குழு உறுப்பினர் பி.பாலன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கே.பொம்முதுறை, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், கிளைச் செயலாளர்கள் எஸ்.சந்திரசேகர், கே‌.கதிரேசன் மற்றும் பொதுமக்கள் திர ளாக கலந்து கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் பாறைக்குழிகளை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனடிப்படையில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

;