மாவட்டங்கள்

திருப்பூர் : அமர்ஜோதி குடியிருப்பில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை திறப்பு

திருப்பூர், அக். 18 - திருப்பூர் அமர்ஜோதி கார்டன் குடியி ருப்பில் சிசிடிவி கண்காணிப்புக் கேமிரா கட்டுப்பாட்டு அறையை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஞாயிறன்று திறந்து வைத் தார். இந்த குடியிருப்பில் மொத்தம் 48 கண் காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட் டுள்ளன. இந்த கேமிராக்களின் கட்டுப் பாட்டு அறை அமர்ஜோதி கார்டன் குடியி ருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் புதி தாக கட்டப்பட்டது. இந்த விழாவில் குடியிருப்போர் சங்க கௌரவத் தலைவர் பி.கே.ரமேஷ்குமார், தலைவர் டி.கே.தண்ட பாணி, செயலாளர் சோமசுந்தரம், பொருளா ளர் பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். அத்துடன் அமர்ஜோதி குடியிருப்பில் குடிநீர் விநியோகம், தாழ்வழுத்த மின் விநி யோகம் ஆகிய பிரச்சனைகளை சீர் செய்ய வும், பாதாளச் சாக்கடை திட்டத்தில் இந்த குடியிருப்பையும் இணைக்கவும் எம்எல்ஏ விஜயகுமாரிடம் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

;