திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

img

பட்டினியின் விழிம்பில் வாடகை வாகன ஓட்டுநர்கள் நிவாரணம் இல்லாவிட்டால் தற்கொலை செய்வதாக குமுறல்

திருப்பூர், ஆக. 3- கொரோனா ஊரடங்கு தொடங் கியதில் இருந்து கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வேலையும், வருமானமும் இல்லாமல் பட்டினி யின் விழிம்பில் சிக்கியிருப்பதாக வும், தங்களுக்குத் தேவையான நிவா ரணம் வழங்க வேண்டும், இல்லா விட்டால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் திருப்பூரில் வாடகை வாகன ஓட்டு நர்கள் மனக்குமுறலை வெளிப்ப டுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு திங்களன்று வாடகை கார், வாடகை வேன் உள்ளிட்ட தங் கள் வாகனங்களுடன் ஏராளமான ஓட்டுநர்கள் திரண்டு வந்தனர். இதன்பின் அவர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கினால் மொத் தமாக தொழில் பாதிக்கப்பட்டு விட் டது. வாடகை வாகனங்களை இயக்க முடியாததால் வருமானமும் இல்லை.

அதேசமயம் குடும்பத்தை நடத்தவும் சிரமப்படுவதுடன், வாக னங்களுக்குத் தவணைத் தொகை, அபராத வட்டி செலுத்த வேண்டும் என்று நிதி நிறுவனங்கள் நிர்பந்தம் செலுத்துகின்றன. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம். எனவே, வாடகை வாகன ஓட்டு நர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், மாநிலம் முழுவ தும் வாடகை வாகனங்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி சென்று வருவ தற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் மண்டல அளவிலா வது இ பாஸ் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

கடன், தவணை, அபராத வட்டி செலுத்த கட்டாயப்படுத்தும் நிதி நிறுவனங்களிடம் உரிய கால அவ காசம் பெற்றுத் தர வேண்டும் என் றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மாவட்ட வருவாய் அலு வலர் சரவணக்குமாரிடம் இது குறித்து கோரிக்கை மனு அளித்து பேசினர். தங்கள்  வாழ்வாதாரத்தை காப்பதற்கு அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் தீ தற்கொலை செய்யும் நிலை ஏற்படும் என்றும் வேதனையு டன் கூறினர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகையில் சுற்றுலா கார் ஓட்டுநர் சங்கத்தினர் தங்களது வாழ்வாதாரத்தை பாது காக்கவும், இ பாஸ் வழங்கக்கோரி யும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர்.  

சேலம்

தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்து நர்கள் திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

;