ஞாயிறு, அக்டோபர் 25, 2020

மாவட்டங்கள்

img

விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிவு காங்கேயம் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை

திருப்பூர் ,செப்.24- விருதுநகர் மாவட்டம் முதல் கோவை வரை 765 கி.வோ மின் பாதை புதியதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே சங்கரண்டாம் பாளையம் கிராமம் செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் மின்கோபுரம் அமைக்கும் பணிகள் செய்ய அண்மையில் அதிகாரிகள் வந்துள்ளனர். அப்போது, அப் பகுதி விவசாயிகள், இங்கு வேலை செய்ய மாவட்ட ஆட்சிய ரின் அனுமதி கடிதம் வைத்திருக்கிறார்களா?  என அதிகாரி களிடம் கேள்வி எழுப்பினர். இதனால் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது.  இதன்பின் அங்கிருந்து கிளம்பி சென்ற அதிகாரிகள், தாங்கள் வந்த கார் டயரின் காற்றை பிடிங்கியதாக அப்பகுதி விவசாயிகள் மீது ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், 19 விவசாயிகள் மீது ஐந்து பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய் துள்ளனர்.  இந்நிலையில், இந்த பொய் வழக்கினை வாபஸ் பெறக் கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாழனன்று காங் கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இரண்டு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வழக்கு குறித்து விசா ரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக  துணை காவல் கண்கா ணிப்பாளர் அளித்த உறுதிமொழியை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.

;