ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

மாவட்டங்கள்

img

சர்வாதிகார உத்தரவைத் திரும்பப் பெறுக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 8 - மாணவர்களுக்குப் பயன்படும் படி ஆலோசனை வழங்கும் வித மாக, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜூலை 7 அன்று  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தி யதற்காக ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றோரின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. இந்த சர்வாதிகார உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன.

அரசு ஊழியர் சங்கம் பல்லடம்  வட்டக் கிளை சார்பில் வெள்ளி யன்று மதிய உணவு இடைவேளை நேரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வட்டக் கிளைத் தலைவர் ரங்கசாமி தலைமை ஏற்றார். மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமன் கோரிக்கையை விளக்கி உரையாற்றினார். வட் டக்கிளைப் பொருளாளர் கே.ஆர்.ஆறுச்சாமி நன்றி கூறினார். திருப்பூர் வடக்கு வட்ட அலுவ லகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக்கி ளைச் செயலாளர் அம்மாசை தலைமை வகித்தார்.

மாவட்ட இணைச் செயலாளர் ராமன், சத்து ணவு ஊழியர் சங்க மாநகரத் தலை வர் மகேந்திரபூபதி, வருவாய் கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தைச் சேர்ந்த ஏசையன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றி னர். சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஆர்.பாஸ்கரன் நிறைவுரை ஆற்றினார். தெற்கு வட்டக்கிளை இணைச் செயலாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். தருமபுரி  தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நல்லம்பள்ளி,  காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி,  தருமபுரி மருத்துவக் கல்லுாரி, பாலக் கோடு, அரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இதில் மாவட்டத் தலை வர் எம்.சுருளி நாதன், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், மாவட்டப் பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட இணை செயலாளர் சி.காவேரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன், தமிழ்நாடு பொது நூலகத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலை வர் பிரபாகரன் மற்றும் வட்டத் தலைவர்கள் மற்றும் அரசு ஊழியர் கள் பலர் கலந்து கொண்டனர்.

;