மாவட்டங்கள்

img

போலி ஆவணம் தயாரித்து மோசடி, ஊழல் சார் பதிவாளர் மீது நடவடிக்கை கோரி அனைத்து கட்சிகள் போராட்ட அறிவிப்பு

திருப்பூர், அக். 18 - பல்லடம் பகுதியில் நில உரிமையா ளருக்குத் தெரியாமல் அவரது நிலத் தின் மீது போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டவர்கள், பல்ல டம் சார் பதிவாளர் ஆகியோர் மீது நடவ டிக்கை எடுக்கவும், சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகளைக் களையவும் வலியுறுத்தி அனைத்து அர சியல் கட்சியினர் இன்று போராட்டத் தில் ஈடுபடுகின்றனர். இது பற்றிய விபரம் வருமாறு: பல் லடம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெக நாதன். இவருக்கு பூர்வீக சொத்து 8.60 ஏக்கர் நிலம், பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் ராயர் பாளையம் பகுதியில் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 கோடி வரும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வங் கித் தேவைகளுக்காக ஜெகநாதன் நிலத்தின் மீது வில்லங்கச் சான்றிதழ் எடுத்துள்ளார். இந்த வில்லங்கச் சான்றிதழில்  இடத்திற்கு சம்பந்தம் இல் லாத நபர்கள் பெயர் இடம் பெற்றுள் ளது. ஏற்கெனவே இந்த நிலத்தின் மீது போலி ஆவணம் தயாரித்தது தொடர் பாக ஜெகநாதன், ஆட்டோ கிருஷ் ணன் எனும் இருவர் மீது நீதிமன்ற வழக்கு உள்ளது.

அவர்கள் இருவரும் சேர்ந்து மேற்படி நிலத்தை விற்பனை செய்வதற்கு ராசு, தனபால் என்ற இருவருக்கு பவர் எழுதிக் கொடுத்துத் ளனர். அதற்காக, ஜெகநாதனின் சிட்டாவைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். இந்த ஆவணத்தில் பல் லடம் சார் பதிவாளர் கையெழுத்திட்டு பதிவு செய்து கொடுத்துள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்த விபரம் தெரியவந்த நிலையில் ஜெக நாதன் அதிர்ச்சி அடைந்தார். தனது பூர்வீக நிலத்தில் தனது சிட்டாவை பயன்படுத்தி போலி ஆவணம் தயா ரித்துள்ளது பற்றி அவர் பல்லடம் நால்ரோட்டில் அமைந்துள்ள சார்பதி வாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் ஏ.பாலசுப்பிரமணியத்திடம் சென்று முறையிட்டுள்ளார். என்னுடைய பூர்வீக நிலத்தில் வேறு நபர்களின் பெயர்கள் இடம் பெற்று, கிரையம் செய்ததாக வந்துள்ளது. இதற்கு கார ணமான குற்றவாளிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெக நாதன் கோரியுள்ளார். இதற்கு சார்பதி வாளர் பாலசுப்பிரமணியம், ஏதோ தெரியாமல் தவறு நடைபெற்றுள்ளது, நானே சரி செய்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதன் பிற கும் இப்பிரச்சனை சரி செய்யப்பட வில்லை. நில உரிமையாளர் ஜெகநாதன் கூறுகையில், சார்பதிவாளர் பதிவு செய்த ஆவணத்தை ரத்து செய்ய அவ ருக்கு அதிகாரம் இல்லை. அதை மாவட்ட மற்றும் மண்டல அளவிலான பதிவுத்துறை உயர் அதிகாரிகள்தான் ரத்து செய்ய முடியும். எனவே மண்டல பதிவு அலுவலகத்தில் உயர் அதி காரிகளிடம் முறையிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் கோரிக்கை

அதேசமயம் ஜெகநாதன் பல்ல டத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சந்தித்து பல்லடம் சார் பதிவாளர், போலி ஆவணம் தயார் செய்து மோசடி செய்துள்ள பிரச்சனை யில் நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எனவே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி, போலி ஆவணம் தயார் செய்தவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட சார் பதிவாளர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பல்ல டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

அத்துடன், அரசியல் கட்சிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் ஜெகநாதன் உட்பட அனைவரும் மாவட்ட பத்திரப் பதிவாளரை சந் தித்து பல்லடம் சார் பதிவாளர் உள் ளிட்ட குற்றவாளிகள் மீது நடவ டிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித் தனர். இருப்பினும் அவர் மீது நடவ டிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை, மண்டல பத்திரப் பதிவு அலு வலகத்தைத் தொடர்பு கொள்ளும் படி மாவட்டப் பதிவாளர் கூறியிருக் கிறார். இதையடுத்து அனைவரும் கோவை மண்டல பத்திரப் பதிவாளரை சந்தித்து  கோரிக்கை மனு அளித்து புகார் தெரிவித்துள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக மண்டல பதி வாளர் கூறியுள்ளார். இதன் பிறகும் பல்லடம் சார் பதிவாளர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பல்லடத்தில் போலியாக ஆவ ணம் தயார் செய்த சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் சேர்ந்து, அக் டோபர் 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள னர்.

சீர்குலைக்கும் முயற்சியில் சார்பதிவாளர் இது குறித்து பல்லடத்தில் உள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறுகை யில், பல்லடம் பத்திரப்பதிவு அலுவ லகத்தில் முறையான பத்திரப்பதிவு செய்யச் சென்றால் தேவையில்லாமல் இழுத்தடிக்கின்றனர். அதிகப்பணம் பெற்ற பிறகுதான் கிரையம் நடை பெறுகிறது. இதற்கு உறுதுணையாக ஆவண எழுத்தர்கள் உள்ளனர். அரசு ஆணைப்படி பூர்வீக நிலத்தை 5 சென்ட், 10 சென்ட் நிலம் ஆக செட்டில் மெண்டாக கொடுக்க வழி உண்டு. ஆனால் அதை மறுத்து வீட்டுமனை யாக பதிவு செய்கின்றனர். இந்தப் பிரச்சனை ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. அரசுக்குச் சொந்த மான பிஏபி நிலத்தையும் தனியா ருக்குக் கிரையம் செய்து கொடுத் துள்ளனர். இந்த நிலையில்தான் ஜெகநாதன் எங்களைச் சந்தித்து தனது நிலத்தை போலியாக ஆவணம் தயார் செய்து, வேறு நபர்களுக்கு சார்பதிவாளர் கிர யம் செய்து கொடுத்து விட்டார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதன் பின்பு  பத்தி ரப் பதிவுத்துறை சார்ந்த அதிகாரி களை, அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைவரும் சந்தித்து முறையாக மனுக்கள் கொடுத்தோம். இதனை அறிந்த பல்லடம் சார்பதி வாளர் பாலசுப்பிரமணியம்  எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி சாதி அமைப்பினை நாடியது மட்டுமின்றி, சாதிய அமைப்பினர் மூல மாக  திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பல்லடத்தில் உள்ள அரசியல் கட்சி யினர் சாதிரீதியாக பல்லடம் சார் பதிவாளரை வேலை செய்ய விடாமல் துன்புறுத்துவதாகவும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்லடம் முழுவதும் சுவ ரொட்டிகளை ஒட்டத் தொடங்கினர்.

அக் 19இல் போராட்டம்

எனினும் பாதிக்கப்பட்ட ஜெகநாத னுக்கு  ஆதரவாகவும், சார்பதிவாளர் மீது முறையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் அனைத்து அரசியல் கட்சி யினர் திட்டமிட்டபடி 19ஆம் தேதி திங்கள்கிழமை பல்லடத்தில் ஆர்ப் பாட்டம் நடத்த முடிவு செய்துள்ள னர். இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்புக் குப் பின்னர், பல்லடம் சார் பதிவாளர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளதாக தகவல் வருகிறது. ஆனால், அவர் விடுப்பில் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. காவல் துறை அனுமதி அளிக்காவிட்டா லும் திட்டமிட்டபடி போராட்டம் நடை பெறும் என்று அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். நில உரிமையாளர் ஜெகநாதன் கூறுகையில், எனது நிலத்தின் மீது தயாரிக்கப்பட்ட போலி ஆவணத்தை பதிவுத் துறை ரத்து செய்ய வேண்டும். மேலும் இதில் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் பல்லடம் சார் பதிவாளர் மீது சட்டப்படி கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து போராடி வருவதாக தெரி வித்தார்.

(ந.நி)

;