ஞாயிறு, அக்டோபர் 25, 2020

மாவட்டங்கள்

img

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கிடுக: கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 22- சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் வளர்மதி கூட்டுறவு பண் டக சாலை முன்பு செவ்வாயன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு  ஊழியர்களை பணி வரன்முறை செய்திடவேண்டும். மருத் துவ பாதுகாப்பு திட்ட நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும்.  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பயன்களை உடனே வழங்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்க ளில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு ஓய்வுகால பென்ஷன் கிடைக்க செய்ய வேண்டும். 100 சதவிகிதம் ரேசன் பொருட்கள் எடை குறைவில்லாமல் ஒதுக்கீடு செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கூட்டு றவு ஊழியர் சங்கத்தினர் வளர்மதி கூட்டுறவு பண்டக சாலை முன்பு செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே.மகேந்தி ரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட பொதுச்செயலாளர் பி.கௌ தமன், மாவட்ட துணைச் செயலாளர் பி.சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர் கள்  எஸ்.சிவக்குமார், கதிர்வேல், நிர் வாகிகள் ராமு, வேலுச்சாமி, ரங்கசாமி, சிவகாமி, ஜோசப் உள்ளிட்ட ஏராள மான ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.

;