மாவட்டங்கள்

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி: காங்கயத்தைச் சேர்ந்தவர் தேர்வு

திருப்பூர், அக். 18 - அடுத்த மாதம் துபாயில் நடைபெற வுள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு காங்க யத்தைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப் பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், காங்கயத்தைச் சேர்ந்தவர் லட்மணன் என்ற லட்சுமண காந்தன்(47). இவர், தனது 5 வயதில் இளம் பிள்ளைவாதம் நோய் தாக்கியதில் இடது கை மற்றும் இடது கால் பாதிப்படைந்தவர். திருமணமான இவருக்கு சிறுவயது முதலே கிரிக்கெட்டின் மீது தீராத காதல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக எங்கு கிரிக்கெட் போ ட்டிகள் நடந்தாலும் ஆர்வத்துடன் பார்க்கச் சென்றுவிடுவார். மேலும் கிரிக்கெட் விளை யாடியும் வருகிறார்.

இதனைக் கண்ட அரியலூர் கிரிக்கெட் பயிற்சியாளர் வெங்க டேஷ் என்பவர் இவருக்கு மாநில, தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகள் கிரிப் கெட் போட்டியில் விளையாட ஆலோ சனை கூறி வழிகாட்டியுள்ளார்.  அதன்படி நவம்பர் மாதம் துபாயில் நடை பெறவுள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சார்பில் விளை யாடுவதற்கு கடந்த வாரம் மதுரையில் வீரர்கள் தேர்வு நடைபெற்றது. அதில் இவர் கலந்து கொண்டு அணிக்குத் தேர்வாகியுள் ளார். துபாயில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என 5 அணிகள் விளையாடவுள்ள இப்போட்டியில், தமிழக அணியான சென்னை சூப்பர் ஸ்டார் அணிக் காக லட்சுமணகாந்தன் விளையாடவுள் ளார்.

;