வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

மாவட்டங்கள்

img

அவிநாசி: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அவிநாசி, ஜூலை 3- திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் பறக்கும் படையினரின் பணிகளை ஆய்வு செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வெள்ளியன்று அவிநாசியில் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட இடங் களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது முகக்கவ சம் அணியாமல் இருந்தவர்களுக்கு அறிவுரை கூறி முகக்க வசம் வழங்கினார்.  மேலும், கடை உரிமையாளர்கள் முகக் கவசம் அணியாதவர்களை கடைக்குள் அனுமதிக்க வேண் டாம் என அறிவுறுத்தினார்.   இதைத்தொடர்ந்து அவிநாசியை அடுத்து வடுகபாளை யம் பகுதியை பார்வையிட்ட அவர், அங்கிருந்த கிராமப்புற அம்மன் கோவிலில் வழிபாட்டு முறைகளில், தனிமனித இடைவெளி மற்றும் நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தொற்று விழிப்பு ணர்வு குறித்து அறிவுரை வழங்கினார்.

;