மாவட்டங்கள்

தாராபுரம் நகராட்சி ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று

தாராபுரம்,  ஜூன் 25- தாராபுரம் நகராட்சி ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், உடனடியாக அப்பகுதி மக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி ஊழி யர்கள் 4 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நகராட்சி அலுவலகம் பூட்டப்பட்டது.

இந்நிலையில் இவர்கள் மூலம் தாராபுரம் பகுதியில் கொரோனா பர வல் அதிகமாக இருக்கும் என பொதுமக்கள் மத்தி யில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நிர்வாகம் உடனடியாக பொதுமக்களுக்கு போர்க்கால அடிப்ப டையில் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாரா புரம் நகரக்குழுவின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள் ளது.

;