சனி, செப்டம்பர் 26, 2020

மாவட்டங்கள்

கடன் தொகைக்காக பெண்களை இழிவாக பேசுவோர் மீது வழக்கு பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 16- திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றி யத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உத விக்குழுக்கள் மீதான கடன்களை கேட்டு கொ ரோனா ஊரடங்கு காலத்தில் அத்துமீறும் நுண்கதிர் நிறுவனங்களை தடைசெய்ய வேண்டும். பெண்களை இழிவாக பேசம் நுண்நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்தி ந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புத னன்று லால்குடி தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தை கூட்டத்தில் மாதர் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் மல்லிகா, ஒன்றிய செய லாளர் கோமதி ஆகியோர் கலந்து கொண்ட னர். அரசாணைப்படி ஆகஸ்ட் 31 வரை லால்குடி வட்டத்தில் செயல்படும் அனைத்து நிதி நிறுவன ஊழியர்கள், நுண்நிதி ஊழி யர்கள் மகளிர்குழு பெண்களிடம் நிதி வசூல்  செய்யக்கூடாது. நிலுவை தொகைகளை வசூல் செய்ய யாரையும் துன்புறுத்த கூடாது.  அவ்வாறு செய்யும் நிதிநிறுவனங்கள் மீது  வழக்கு பதிவு செய்யப்படும் என முடிவானது.

;