மாவட்டங்கள்

img

ரத்ததான முகாம்

 திருச்சிராப்பள்ளி, ஜூலை 21- திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் ஞாயிறு அன்று ஸ்ரீரங்கம் தேவி தியேட்டரில் தோழர் அசோக் நினைவரங்கத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகா மிற்கு முன்னாள் பகுதி செயலாளர் சுப்ரமணி தலைமை வகித்தார். முகாமை நந்தகுமார் தொடங்கி வைத்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கனல்கண்ணன், முன்னாள் மாநில துணைத் தலைவர் வெற்றிச்செல்வன், மாவட்ட தலைவர் சந்திரபிர காஷ், மாவட்ட செயலாளர் லெனின், ஸ்ரீரங்கம் பகுதி செய லாளர் தர்மா, பகுதி தலைவர் ஜெய்குமார் உள்பட பலர் கொண்டனர். முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

;