மாவட்டங்கள்

img

நன்னிலம் வள்ளலார் பள்ளி சார்பில் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நன்னிலம், மே 3-திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான 4 கி.மீ மற்றும் ஆண்களுக்கான 15 கி.மீ மாரத்தான் ஓட்டத்தை நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச் செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகுவேந்தன் தொடங்கி வைத்தனர்.இதில் ஆண்கள் பிரிவில் சந்தோஷ்குமார் முதலிடத்தையும், எஸ்.வினோத்குமார் 2-ம் இடம், ஆர்.தமிழ்ச்செல்வன் 3-ம் இடம் பெற்றனர். பெண்கள் பிரிவில் இளவரசி முதலிடம், ரஞ்சனி 2-ம் இடம், கீதாஞ்சலி 3-ம் இடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை ரெட் கிராஸ் சேர்மன் உத்தமன், லயன்ஸ் கிளப் தலைவர் அய்யப்பன், வா்த்தகர் சங்க பொருளாளர் இராதாகிருஷ்ணன், ஜீவன் அறக்கட்டளை அறங்காவலர் சுப்பிரமணியன், அச்சுதமங்கலம் அப்து ல்கரிம், தூயவாழ்வு அறக்கட்டளை அறங்காவலர் கேசவராஜ் வாழ்த்துரை வழங்கினர். போட்டியில் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் நன்னிலம் சந்திரமோகன், சத்யசாய்நாதன், பூந்தோட்டம் வினோத், பனங்குடி விமல்ராஜ், சங்கர், உடற்பயிற்சி பயிற்சியாளர் பாரத, அச்சுதமங்கலம் மோகன் ஆகியோர் செயல்பட்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் பரிமளாகாந்தி வரவேற்று பேசினார். உடற்கல்வி ஆசிரியர் விக்னேஷ் நன்றி கூறினார்.

;