வெள்ளி, செப்டம்பர் 25, 2020

மாவட்டங்கள்

img

தீக்கதிர் செய்தி எதிரொலி : பேராவூரணி சாலை சீரமைப்பு

தஞ்சாவூர், ஜன.17- தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி முதன்மைச் சாலை, தார்ச்சா லையானது கடந்த மாதம் பெய்த மழையினால் மிகவும் சேதமடைந்து, குண்டுங்குழியுமாக காட்சி அளித்தது. இதனால் நீலகண்டப் பிள் ளையார் கோயில் முதல் அரசு மருத்துவமனை வரை சுமார் ஒன்றரை கி.மீ தூரம், ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் சாலை பல்லாங்குழி போல இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப் பட்டனர்.  சாலையை சீரமைக்காவிட்டால், பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என நகர வர்த்தகர் கழகத் தலைவர் ஆர். பி.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து கடந்த ஜன.11 அன்று தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளி யாகி இருந்தது.  இதையடுத்து, பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை உதவிக் கட்டப் பொறியாளர் ஆ.கணேசன், உதவிப் பொறியாளர் ஆர்.ஜெயக்குமார் மேற்பார்வையில் 20 க்கும் மேற் பட்ட நெடுஞ்சாலைத்துறை பணியா ளர்கள், நீலகண்டப் பிள்ளையார் கோயில் முதல் அரசு மருத்துவ மனை வரை சேதமடைந்த சாலையை சீரமைத்தனர். உடனடியாக சாலையை சரி செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு, நகர வர்த்தகர் கழகம் மற்றும் பொது மக்கள் சார்பில் நன்றி தெரிவிக் கப்பட்டது.

;