திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

img

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை மீட்டுதரக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி மனு

தருமபுரி செப். 16- அ.பாப்பாரப்பட்டி பகுதியில் பொது மக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதையை மீட்டுத்தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் மாவட்ட வருவாய் அலுவலர்  ரகமத்துல்லாகானிடம் மனு கொடுத்துள் ளனர். இதுகுறித்து அம்மனுவில் மேலும்  குறிப்பிட்டிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் அ.பாப் பாரப்பட்டியை சுற்றி வேப்பிலை அள்ளி, அஜ்ஜல அள்ளி, நலப்பநாய்க்கனஅள்ளி, பனைகுளம், வத்திரத்துப்பள்ளம், மலையூர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட  கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில்  ஏராள மான மக்கள் பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள சின்ன ஏரிக்கு தண்ணீர் செல்லும் நீர் வழிப்பாதையை பொதுப்பாதையாக உப யோகித்து வருகின்றனர்.  

இந்நிலையில், அப்பகுதியைச்சேர்ந்த சின்னசாமி மகன் தங்கவேல் என்பவர் பொதுப்பாதை நிலம்  சர்வேஎண் 353 - ஐ, பொய்யான ஆவணங் களை உருவாக்கி முறைகேடான வகையில் பட்டா வாங்கி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும், அக்கிராமமக்கள் சென்றுவரவும் தடைவித்தித்தும், அதே பகுதியில் வசித்து வந்த  தாழ்த்தப்பட்ட வள்ளுவர் சமூகத்தினரையும் வெளியேற் றினர். இதனால், அம்மக்கள் தற்போது வீடு இல்லாமல் நிற்கதியில் நிற்கின்றனர். இதுதொடர்பாக, அப்பகுதி பொது மக்கள் சார்பில் 2017 ஜூலை 11 ஆம் தேதி  மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக் கப்பட்டது. இம்மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் பென்னாகரம் வட்டாட் சியர், தருமபுரி கோட்டாட்சியர் ஆகியோர் புலத்தணிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு பட்டாவை ரத்து செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந் துரை செய்தார்.

ஆனால் கடந்த 3 ஆண்டு களாகியும் பாதையை மீட்க எந்த நடவ டிக்கையும் இல்லை. எனவே முறைகேடு செய்து பெறப்பட்ட பட்டாவை ரத்து செய்து  பொதுப்பாதையை மீட்டுக் கொடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்படுவதாக அம்மனு வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன், பகுதிச் செயலாளர் ஆர்.சின்னசாமி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செய லாளர் எஸ்.கிரைஸாமேரி, பொருளாளர் பி.ராஜாமணி, மாவட்டதுணைத்தலைவர் கே.பூபதி மற்றும் அப்பகுதி மக்கள் ஆகி யோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு  அளித்தனர்.

;