திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

img

அரூர்: தொடர் மழையால் சாலையில் விழுந்த பாறைகள்

தருமபுரி, செப். 16- தொடர் மழையின் காரணமாக அரூர்-சித்தேரி சாலை யில் திடீர் மண்சரிவு ஏற்பட்டு பெரிய பாறைகள் சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சித்தேரி ஊராட்சியில் பேரேரிபுதூர், தேக்கம்பட்டி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

இந்த கிரா மங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டம்  முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அரூர்-சித்தேரி மலைப்பாதையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் பாறைகள் சரிந்து சாலையோரம் விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாறைகள் சாலையில் விழ வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோரம் கிடக்கும் பாறைகளை அகற்ற வும், மண் சரிவு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;