செவ்வாய், செப்டம்பர் 22, 2020

மாவட்டங்கள்

உதவிக்குழு நியமனத்தை எதிர்த்து முறையீடு

சென்னை,மே 9-தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கான உதவிக் குழுநியமனத்தை எதிர்த்துசென்னை உயர்நீதிமன் றத்தில் முறையீடு செய்யப் பட்டுள்ளது.தனி அதிகாரி என்.சேக ருக்கு உதவியாக இயக்குநர் பாரதிராஜா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர் அடங்கிய குழு நியமிக்கப் பட்டது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் சங்க செய லாளர் கதிரேசன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறை யீடு செய்யப்பட்டது.தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்த வழக்குநிலுவையில் உள்ள நிலையில் தற்காலிக குழுவை நியமிக்க அதிகாரிக்கு அதிகார மில்லை என வாதிடப்பட்டது. இதை மனுவாக தாக்கல் செய்தால் நாளை(இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி அனு மதியளித்தார்.

;