வெள்ளி, செப்டம்பர் 25, 2020

மாவட்டங்கள்

img

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்

கும்பகோணம், டிச.8- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் பருத்திச்சேரி ஊராட்சி பகுதி யில் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே ஆரியசேரி, பருத்திச்சேரி ஆகிய பகுதிகளை இணைக்கும் மூங் கில் மரப்பாலம் ஊராட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் அமைக்கப் பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த னர். இந்நிலையில் அண்மையில் பெய்த கனத்த மழையினால் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து தற்காலிக மாக கட்டப்பட்ட மூங்கில் ஆற்றுப் பாலம் அடித்து செல்லப்பட்டது.  பருத்திச் சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரிய சேரியின் ஒரு பகுதியான அக் கறை தெருவில் சுமார் 55 குடும்பங்கள் பல தரப்பு மக்கள் வாழ்ந்து வருகின்ற னர்.  இவர்கள் அனைவரும் அந்த மூங் கில் பாலத்தின் வழியாக அருகிலுள்ள நகர பகுதியான குடவாசல் மற்றும்  அருகிலுள்ள கிராமத்திற்கும் சென்று வந்தனர். ஆற்றின் குறுக்கே மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மூங்கில் பாலம் வழியாக  பொது மக்கள் மருத்துவமனைக்கும், மாண வர்கள் பள்ளி செல்வதற்கும் அக்கறை தெருவில் வசிக்கும் கிராம மக்கள் பருத்தி சேரியில் அமைந்துள்ள சுடு காட்டிற்கு பிரேதம் எடுத்துச் செல்வ தற்கும் பயன்படுத்தி வந்தனர்.  இந்நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மூங்கில் பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தால் அங்கு வசித்து வரும் பொது மக்கள் அன்றாட வேலைகளுக்கு ஆற்றைக் கடக்க சுமார் இரண்டு கிலோ மீட்டர் சுற்றி போகும் அவல நிலை நிலவி வருகிறது. ஆகையால் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு மரப் பாலம் கட்டப்பட்ட அதே இடத்தில் போர்க்கால அடிப்படையில் நிரந்தர மாக பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் சார்பாக சிபிஎம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். உடனடி யாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஊர் மக்களை திரட்டி போராட்டம் நடை பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

;