சனி, செப்டம்பர் 26, 2020

மாவட்டங்கள்

தஞ்சாவூர் , தரங்கம்பாடி, அரியலூர் முக்கிய செய்திகள்

வேன்- கார் மோதல் இருவர் பலி: 9 பேர் காயம்
தஞ்சாவூர் டிச.8-  கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஓலத்தண்ணி பகுதியைச் சேர்ந்தவர் சுதி (46) அவரது மனைவி சைனி (35) மகன்கள் நவீன் (17), நிவீன் (15) நான்கு பேர் காரில் வேளாங்கண்ணி நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனர். காரை சுதியே ஓட்டிச் சென்றுள்ளார். அந்த கார் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் காரங்குடா அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் வெடித்து நிலை தடுமாறி எதிரே பட்டுக்கோட்டையில் இருந்து மீமிசல் நோக்கி வந்து கொண்டிருந்த வேன் மீது நேருக்கு நேராக மோதியது.  இதில் காரில் பயணம் செய்த நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிசிக்சை பலனின்றி சுதி அவரது மனைவி சைனி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வேனில் பயணம் செய்த டிரைவர் மணி உள்பட 7 பேர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேன் கவிழ்ந்து 25 பேர் காயம் 
கும்பகோணம், டிச.8-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உத்தாணி, சுந்தரபெருமாள் கோயில் பைப்பாஸ் சாலையில் புதுச்சேரி யில் இருந்து ஒரு வேன் மூலம் சபரிமலை செல்ல 25 பேர் வந்து கொண்டு இருந்தார்கள். அப்போது கும்பகோணத்தி லிருந்து தஞ்சை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டு இருந்த தனியார் பேருந்து ஒன்று வேனை முந்த முயன்ற போது வேனை இடித்ததில் வேன் அருகில் உள்ள வாய்க்கா லில் தலைகுப்புற விழுந்தது. இதில் பயணம் செய்த 25 பேர் காயத்துடன் உயிர் தப்பினார்கள், இது குறித்து வலங்கை மான் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகாரிகள் தரக்குறைவாக பேசியதாக பெண் தற்கொலை முயற்சி 
தஞ்சாவூர், டிச.8- தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே சீகன்காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 47) விவசாயி. இவ ரது மனைவி ஞானசுந்தரி (வயது 43) இவர்களது வயலின் அருகிலுள்ள மற்றொருவரின் வயலுக்கு போர்வெல் மின் இணைப்பு கொடுப்பதற்காக, பெருமகளூர் மின்வாரிய அதிகாரிகள் சக்திவேலின் வயலில் குறுக்கே மின்கம்பி கள் அமைத்துக் கொண்டிருந்தனர்.  சக்திவேலின் மனைவி ஞானசுந்தரி இதைத் தடுத்து, வேறு வழியாக மின்கம்பத்தை அமைக்குமாறு தெரி வித்துள்ளார். இதனை மின்வாரிய அதிகாரிகள் ஏற்க மறுத்து, தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஞான சுந்தரிக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சக்திவேலின் மனைவியை மின்வாரிய அதிகாரிகள் தரக்குறைவாக பேசி யதாக கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த சக்திவேலின் மனைவி ஞான சுந்தரி தங்களது வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தினை எடுத்து குடித்து விட்டார். அக்கம்பக்கத்தினர், ஞானசுந்தரியை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக் கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்த புகாரில் பேராவூரணி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சேதமடைந்த ஆற்றுப் பாலம் 
தரங்கம்பாடி, டிச.8- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், நெடுவாசல் கிராமம் வழியாக செல்லும் கடலாழி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் அப்பாலம் வழியாக கடந்து செல்பவர்கள் அச்சத்துட னேயே செல்வதாக கூறுகின்றனர். இப்பாலம் இடிந்து விழுந்தால் நல்லுச்சேரி, கூடலூர், கீழ்மாத்தூர், ஒட்டங்காடு உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட உள் கிராமங்கள் முற்றிலும் துண்டிக்கப்படும் என்பதால் உடனடியாக பாலத்தை இடித்து விட்டு புதிதாக தரமான பாலத்தை கட்ட வேண்டு மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த பாலத்தை சீரமைத்து தரக் கோரிக்கை 
அரியலூர், டிச.8- அரியலூர் மாவட்டம் செட்டிபாளையம் பஞ்சாயத்து முனியன் குறிச்சி கிராமத்தில் பிரதான சாலையில் உள்ள பாலம் சேதமாகி ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இதுவரை மாவட்ட நிர்வாகம் அந்த பாலத்தை சீரமைக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. சாலையிலிருந்து பாலம் பாதி அளவுக்கு இணைப்பை துண்டித்து உள்ளது. மனித உயிர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு அசாதாரண சூழ்நிலை உள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் சேத மடைந்த இந்த சாலையையும், பாலத்தையும் சீரமைத்து மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என சிபிஎம் அரியலூர் ஒன்றியத் செயலாளர் துரை.அருணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘சிவப்பு புத்தகம் வாசிப்போம்’ 
தஞ்சாவூர், டிச.8- தஞ்சாவூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில், தஞ்சை மாவட்ட வாசிப்பு வட்டம் சார்பில், சிவப்பு புத்தக தினத்தையொட்டி, “கம்யூனிஸ்ட் அறிக்கை” பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.  கடந்த 1848 ஆம் ஆண்டு பிப். 21-ல் கம்யூனிஸ்ட் அறிக்கை யை மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் வெளியிட்டனர். இதையொட்டி வரும் 2020 பிப்.21 சிவப்பு புத்தக தினமாக அறிவித்து, அதை அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு முடிவு செய்துள்ளது.  இதையடுத்து, தஞ்சையில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், மாநிலக் கல்விக்குழு பொறுப்பா ளருமான என்.குணசேகரன் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தி னார். அப்போது கம்யூனிஸ்ட் அறிக்கையை எளிதாக புரிந்து கொள்ளுதல், குழுவாக வாசிப்பது, மக்களிடையே அதனை கொண்டு செல்வது” குறித்து விளக்கிப் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட கல்விக்குழு பொறுப்பாளர் கே.பக்கிரிசாமி தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சின்னை.பாண்டியன், சி. ஜெயபால், எம்.மாலதி, பி.செந்தில்குமார், என்.வி.கண் ணன், என்.சுரேஷ், எஸ்.தமிழ்ச்செல்வி, கே.அருளரசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இதர அரங்கத்தினர், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

;