திங்கள், செப்டம்பர் 21, 2020

மாவட்டங்கள்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டப் பொருளாளர் நீக்கம்

தஞ்சாவூர், ஆக.12- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் எம்.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, மாநிலத் தலைவர் த.வெள்ளையன் தலைமையில், நமது சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  தற்போது மாவட்டப்  பொருளாளர் பொறுப்பில் இருக்கும், பி.வாசுதேவன் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், அவர் மாவட்ட பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  எனவே, தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள், எவரும் சங்க நடவடிக்கை தொடர்பாக அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;