ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

மாவட்டங்கள்

‘பெரியார் கல்வி கொரோனா உதவித் தொகை’ 100 சதவீத கல்வி கட்டண சலுகை: பல்கலை. வேந்தர் கி.வீரமணி அறிவிப்பு

தஞ்சாவூர், ஆக.12- தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லம் பெரி யார் மணியம்மை அறிவியல் மற்றும் தொ ழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் டாக்டர் கி.வீர மணி காணொலிக் காட்சி மூலம் கல்வி புரவ லர்களிடையே உரையாற்றினார்.  அப்போது பல்கலைக்கழகம் அளித்து வரும் பல்வேறு வகை கல்வி உதவித் தொ கைகளை குறிப்பிட்டார். குறிப்பாக, அன்னை  ஈ.வெ.ரா.மணியம்மையார் முதல் தலை முறை பட்டதாரிகள் கல்வி உதவித் தொகை,  அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் மகளி ருக்கான கல்வி உதவித்தொகை, விளையா ட்டு வீரர்களுக்கான கல்வி உதவித் தொகை  போன்று பல்வேறு வகை கல்வி உதவித்தொ கைகளை இந்த பல்கலைக்கழகத்தில் பயி லும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. அத்துடன் புதியதாக, “பெரியார் கல்வி கொரோனா உதவித் தொகை” திட்டத்தையும் அறிவித்தார்.  அதில், “கொரோனா -19 உலக அளவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியதால் பல குடு ம்பங்கள் வேலைவாய்ப்பினை இழந்து நிதி நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பல குடும்பங்களின் உறுப்பினர்கள் கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டும், பலர் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்து, வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.  

மேலும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளி க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், களப்ப ணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள், சுகா தாரத்துறை ஊழியர்கள், ஆகியோரும் இதில்  அடங்குவர். இதனை கருத்தில் கொண்டு  கொரோனா நோயினால் நேரடியா கவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பு க்குள்ளாகி உள்ள குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு, இந்த ஆண்டு  பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்க ளுக்கு “பெரியார் கல்வி கொரோனா உத வித் தொகை” என்ற புதிய கல்வித் தொகை  ஒன்றை அறிவித்து இதன் மூலம் இந்த ஆண்டு  2020-21 கல்வி சேர்க்கையின் கல்வி கட்ட ணத்தில் 100 விழுக்காடு விலக்கு அளிக்கப்ப டுகிறது” என்றார்.  இந்த புதிய “பெரியார் கல்வி கொ ரோனா உதவித் தொகையினால்” நிறுவனத்தி ற்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்றாலும்  மக்களின் நிதி நெருக்கடிக்கு உதவிடும் வகை யில் மாணவர்கள் தங்கள் கல்வியினை தொட ரும் வகையில் இந்த புதிய பெரியார் கல்வி கொ ரோனா உதவித்தொகை அறிவிக்கப்பட்டு ள்ளது” எனவும் வேந்தர் டாக்டர் கி.வீரமணி தெரிவித்தார்.

;