வெள்ளி, செப்டம்பர் 25, 2020

மாவட்டங்கள்

img

கண்ணனாறு உடைப்பால் 11 கிராம நெல் பயிர்கள் மூழ்கின

தஞ்சாவூர், டிச.8- தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே வெள்ளப்பெருக்கு காரணமாக கண்ணனாறில் ஏற்பட்ட உடைப்பி னால் மூழ்கிய சம்பா நெல் பயிர் களை பெரியக்கோட்டை கிராமத்தில் வேளாண்மை இயக்குநர் தெட்சிணா மூர்த்தி ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் வேளாண்மை இயக்குநர், “கண்ணனாறு பாலம் உடைப்பு கார ணமாக பெரியக்கோட்டை,  சொக்க னாவூர், காடந்தங்குடி உள்ளிட்ட 11 கிராமங்களிலும் நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர் பரப்புகளை வருவாய் துறை யும் வேளாண்மைத் துறையும் கூட்டாக இணைந்து ஆய்வு செய்து அந்த அறிக் கையை விரைந்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும்” என வேளாண் அதி காரிகளிடம் அறிவுறுத்தினார்.  ஆய்வின் போது மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஐஸ்டின், துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் கணேசன், வேளாண் துணை இயக்குநர்கள் (மாநில திட்டம்) பரமசிவம், (மத்திய திட்டம்) சிங்காரம், உதவி இயக்குநர்கள் (தரக்கட்டுப் பாடு) சாருமதி, (பயிர்க் காப்பீடு) சுதா, விதை பரிசோதனை அலுவலர் சிவ வீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்த னர். மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் திலகவதி, உதவி விதை அலுவலர் அன்புமணி உள்ளிட்டோர் ஆய்விற்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

;