வியாழன், செப்டம்பர் 24, 2020

மாவட்டங்கள்

சாயப்பட்டறை மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மனு

சேலம், செப். 16- சேலம் மாவட்டம், எரு மாபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாத்திமா நகர் பகுதியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதி யில் செயல்பட்டு வரும் ஏ.ஆர்.சி தனியார் சாயப் பட்டறையின் கழிவு நீர் அருகே உள்ள குருவிபனை ஏரியில் கலப்பதால் அப்ப குதியில் நிலத்தடி நீர் மாச டைந்துள்ளதோடு,  குடி நீரும் கழிவு நீர் கலந்தே வரு வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பல முறை மாசு கட்டுபாடு வாரியத்தில் புகார் அளித்தும் சம்மந்தப் பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, போர்க் கால அடிப்படையில் சாயப் பட்டறை மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் புத னன்று புகார் மனு அளித்த னர்.

;