வெள்ளி, அக்டோபர் 30, 2020

மாவட்டங்கள்

img

வங்கிகளில் தமிழில் படிவங்களை வழங்குக தமுஎகச மனு கொடுக்கும் இயக்கம்

சேலம், அக். 17- அனைத்து வங்கிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிவங்களை வழங்க வேண்டும் எனக்கோரி சேலத்தில் தமுஎகச-வினர் மனு கொடுக்கும் இயக்கத்தில் ஈடுபட்ட னர். மத்திய பாஜக அரசு படிப்படி யாக தமிழ் மொழியை சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்திலும் இந்தி பிரதான மொழியாக முன்னிறுத்தப்பட்டு, அங்கு வழங்கப்படும் ரசீதுகள், படி வங்கள் அனைத்தும் இந்தி மொழி யில் அச்சடிக்கப்பட்டு வாடிக்கை யாளர்களுக்கு விநியோகிக்கப் பட்டு வருகிறது.

 எனவே, அனைத்து வங்கிகளி லும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படி வங்கள் மற்றும் ரசீதுகள் அச்சடித்து வழங்கிட வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார் பில் சேலத்திலுள்ள எல்.ஐ.சி., கனரா வங்கி,  ஸ்டேட் வங்கி, அஞ் சல் அலுவலகம், ஐ.ஓ.பி., இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிக ளில் மனு அளித்தனர்.  இதில், தமு எகச மாவட்டச் செயலாளர் நிறை மதி, மாவட்டத் தலைவர் மதுர பாரதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரகுபதி, கலையர சன், பார்த்திபன், கருணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;