புதன், செப்டம்பர் 23, 2020

மாவட்டங்கள்

img

விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு விவசாயிகள் கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 7- விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து   விவசாயிகள் விளைநிலங்களில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடகா மாநிலம் தேவனகுந்தி வரை எரிவாயுவைக் கொண்டு செல்லும் வகையில் ஐடிபிஎல் திட்டம் விளை நிலங்கள் வழியாக செயல்படுத்தப் பட்டு வருகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற னர்.  இச்சூழலில், விவசாயிகளிடம் கருத்து கேட்பது என்கிற பெயரில் தொடர்ச்சியாக அழைப்பாணை  அனுப்பி  விவசாயிகளை நெருக்கடிக் குள்ளாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம், தோரமங்கலம், சூரப் பள்ளி, சின்னாகவுண்டம்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங் கள் நிலத்தில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், சிபி எம் மாவட்டக்குழு உறுப்பினர் கே. ராஜாத்தி, ஜெயவேல் மற்றும் திர ளான விவசாயிகள் கலந்து கொண் டனர்.

;