வெள்ளி, அக்டோபர் 30, 2020

மாவட்டங்கள்

img

இந்திய கம்யூனிச இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

 சேலம், அக்.17- இந்திய கம்யூனிச இயக்க நூற் றாண்டு நிறைவு விழா சனியன்று பெரும் எழுச்சியுடன் கொண்டாடப் பட்டது. இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா சனியன்று நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

இதன்ஒருபகுதியாக, மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட குழு அலு வலகமான சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் மாவட்ட செயலா ளர் பி.ராமமூர்த்தி தலைமையில் கொடி யேற்று விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி செங்கொடியை ஏற்றி வைத்து  சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து காரல் மார்க்ஸ் சிலைக்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி. உதயகுமார், எம்.குணசேக ரன் உள்ளிட்டோர் மலர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இந்நி கழ்வில் திரளானோர் கலந்து கொண்ட னர்.

இதேபோல், சேலம் மாநகர கிழக்கு, வடக்கு, மேற்கு, சேலம் தாலுகா, சங்ககிரி, எடப்பாடி, மேச் சேரி, மேட்டூர், நங்கவள்ளி, கல்வரா யன் மலை, ஓமலூர் உள்ளிட்ட மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் கம்யூ னிச இயக்க நூற்றாண்டு கொடி யேற்று விழா எழுச்சியுடன் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி யின் நிர்வாகிகள் எம். கனகராஜ், என். பிரவீன்குமார், எஸ்.கே.சேகர், பெரி யண்ணன், மணிமுத்து, கே. ராஜாத்தி, சுல்தான், பி.அரியா கவுண்டர், பொன் னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு செங்கொடியை ஏற்றி வைத்தனர்.

மேலும், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில், கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பிரெ டரிக் ஏங்கல்ஸின்,  கம்யூனிசத்தின் கோட்பாடுகள் குறித்த புத்தக வாசிப்பு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. சிஐ டியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்வில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயி னார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் சேலம் மண்டலத்தை உள்ளடக்கிய சேலம், தருமபுரி, நாமக் கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொன்டனர்.

தருமபுரி

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பென்னாகரம் வட்டம்,  சின்னம் பள்ளி பகுதிக் குழு, கொப்பளூர் கிளை மூத்ததோழர் கே.எம். அரங்கநாதனின் 15-ஆம் ஆண்டு நினைவு தினம் அனு சரிப்பு மற்றும் இந்திய கம்யூனிச இயக்க நூற்றாண்டு கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சின்னம்பள்ளி பகுதி குழு செயலாளர் ஜி. சக்திவேல்  தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன் செங்கொடியை ஏற்றி வைத் தார். நூற்றாண்டு கல்வெட்டை  மாவட்ட செய்ற்குழு உறுப்பினர்  பி.இளம்பரிதி திறந்து வைத்தார். நிறைவாக,  மாவட்டச் செயலாளர் அ. குமார் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ் வில் பென்னாகரம் பகுதி குழு செய லாளர் கே.அன்பு, பென்னாகரம் நகர செயலாளர் எஸ்.வெள்ளியங்கிரி மற் றும் பி.எம்.முருகேசன், எம்.குமார், வி.ரவி, எம்,சிவா, எழிலரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி செங்கொடிபுரத்தில் நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை யில் கொடியேற்று விழா நடைபெற் றது. இதில் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.கிரைஸாமேரி, ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி மற்றும் வழக்கறிஞர் டி.மாதையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு  செங்கொடியை திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து தாலுகா கமிட்டி உறுப்பினர் ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற பேரவைக் கூட்டத் தில் மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன், கம்யூனிச இயக்க வரலாறு குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சி யில் தாலுகா செயலாளர் என்.கனக ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். உடுமலை மத்திய பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற  கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு கொடி யேற்று விழாவில் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் கொடியை மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். மதுசூதனன் ஏற்றிவைத்தார்.

இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட துணை செயலாளர் எஸ். ஜெகதீசன், நகர செயலாளர் தண்ட பாணி, ஒன்றிய செயலாளர் கனகராஜ் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மஜீத், ஜஹாங்கீர், கலிபுல்லா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

திருச்செங்கோடு நகரக்குழுவிற்கு உட்பட்ட சூரியம்பாளையத்தில் கிளைச் செயலாளர் கார்த்தி தலை மையில் நடைபெற்ற நிகழ்வில் நகரச் செயலாளர் ஐ.ராயப்பன் செங்கொ டியை ஏற்றி வைத்து சிறப்புரை யாற்றினார். இதில் கிளை செயலாளர் கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கோவை

கோவை சிங்காநல்லூர் 62 ஆவது வட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் செங்கொடியினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோ கரன் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய், நகரச் செயலாளர் தெய்வேந்தி ரன் மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நீலகிரி மாவட்டக்குழு அலுவ லகத்தில்  நடைபெற்ற விழாவில் கட்சியின் மூத்த தோழர் சீத்தாராமன், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அனைவரும் மதவாத சக்திகளிடம் இருந்து இந்திய நாட்டை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர்.

இதைத்தொடர்ந்து மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் தலை மையில் நடைபெற்ற பேரவை கூட்டத் தில், கம்யூனிச இயக்கத்தின் நூற் றாண்டு தியாக வரலாறு குறித்து கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி கருத்துரையாற்றினார்.

இந்த  நிகழ்ச்சியில் இடைக்கமிட்டி செயலா ளர் எல்.சங்கரலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் சி.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எருமாடு இடைக்குழு அலுவல கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ் கரன் செங்கொடியை ஏற்றினார். இவ் விழாவில் திரளானோர் கலந்து கொண் டனர்.

;