வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

மாவட்டங்கள்

ரேசன் பொருட்கள் வாங்கியோருக்கு பணத்தை திருப்பித்தர வேண்டும்

சென்னை, ஜூலை 4- ரேசன் கடையில் பொருட்களை வாங்கி யோருக்கு பணத்தை திருப்பித்தர வேண்டும்  என்று கோரிக்கை எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 24 அன்று நள்ளிரவு தொடங்கிய ஊர டங்கு 6வது கட்டமாக ஜூலை 30ந் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் ஆயி ரம் ரூபாய் நிவாரணமும், ரேசன் பொருட்க ளும் தமிழக அரசு இலவசமாக வழங்கியது. அதன்பிறகு மே, ஜூன் மாதங்களில் ரேசன்  பொருட்களை மட்டும் இலவசமாக வழங்கி யது. ஊரடங்கு கால வருவாய் இழப்பை சமா ளிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு 7 ஆயிரத்து 500 ரூபாயும், மாநில அரசு  5ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க வேண்டும், 6 மாதங்களுக்கு இலவச ரேசன்  பொருட்களை வழங்க வேண்டும் என்று  எதிர்க்கட்சிகளும் பொருளாதார நிபுணர்க ளும் வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், ஜூலை மாதம் ஒன்றாம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக ஜூன் 29ந்  தேதி இரவு தமிழக அரசு அறிவித்தது. ஆனால்,  நிவாரணம் மற்றும் ரேசன் பொருட்கள் இலவச மாக வழங்குவது குறித்து அறிவிப்பை வெளி யிடவில்லை.

இதனால் ஏழை எளிய மக்கள்  கடன்பட்டு, ஜூலை 1 முதல் ரேசன் பொருட் களை விலை கொடுத்து வாங்கினர். இதனையடுத்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டக் குழு சார்பில் ஜூலை 3ந் தேதி முதல்  அடுத்த 6 மாதங்களுக்கு ரேசன் பொருட் களை இலவசமாக வழங்க வலியுறுத்தி இணையவழி போராட்டத்தை தொடங்கினர். மேலும், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பினர்.  அதனைத் தொடர்ந்து அன்று  மாலையே இலவச பொருட்கள் வழங்குவ தற்கான அறிவிப்பினை அரசு வெளியிட்டது. இதுகுறித்து பேசிய வாலிபர் சங்கத்தின்  மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மஞ்சுளா, “காலதாமதமாக இருந்தாலும், வாலிபர் சங்கத்தின் வலியுறுத்தலையடுத்து ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும்  6 மாதம் இலவச ரேசன் பொருளை வழங்க வேண்டும். ஜூலை 3ந் தேதி வரை ரேசன் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி தர  வேண்டும் அல்லது அவர்களுக்கும் இலவச  ரேசன் பொருட்களை வழங்க வேண்டும்” என்றார்.

;