திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

காசிமேடு மீனவர்கள் 10 பேர் மாயம்

சென்னை, ஆக. 10- சென்னை காசிமேடு மீனவர்கள் 10 பேர் 20 நாட்களாகி யும் கரை திரும்பவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 5 மாதங்களாக நீடிக்கும் ஊரடங்கால் தினசரி 50 படகுகள் மட்டுமே  மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காசிமேடு பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்பட கில் ஜூலை 22ந் தேதி 10 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க  சென்றனர். 7 நாட்களில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள்  20 நாட்கள் ஆகியும் திரும்பவில்லை. இதனால் அச்சம டைந்துள்ள உறவினர்கள், காசிமேடு மீன்பிடி உதவி இயக்குநர் அலுவலகத்தில் புகார்  அளித்துள்ளனர். அதில், மீனவர்களை ஹாலிகாப்டர் மூலம் தேட கோரிக்கை வைத்துள்ளனர்.

;