திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

பள்ளி ஆவணங்களை பெற்றுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் மனு

கோவை, செப்.16- கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த வித்யா என்ற பெண்மணி தனது  பள்ளி ஆவணங்களை கல்லூரி நிர்வாகம் தர மறுப்பதால், அதனை பெற்று தர வலியு றுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.  இதுகுறித்து வித்யா கூறுகையில், 2010  ஆம் ஆண்டு பொள்ளாச்சி சாலையில் உள்ள  கிறிஸ்த்துநாதர் பாலிடெக்னிக் கல்லூரி யில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்து படித்து வந்தேன். ஒரு வருடம் அங்கு படித்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல் போனது. இந்நிலையில், தற்போது தனக்கு  திருமணமாகி தனது கணவர் நவீன்குமார் பெயிண்டிங் வேலைக்கு செல்வதால் போதிய வருமானமின்றி தவித்து வருகி றோம்.

இதனால் தானும் ஒரு வேலைக்கு சென்று அவருக்கு உதவிட வேண்டும் என  எண்ணினேன். இதற்கு பள்ளி சான்றி தழ்கள் தேவைப்படுவதால், கல்லூரி நிர்வா கத்திடம் கேட்ட போது மூன்றாம் ஆண்டு பருவ தேர்வுக்கு செலுத்த வேண்டிய ரூ.11  ஆயிரம் கொடுத்துவிட்டு சான்றிதழ் களை பெற்று கொள்ளுமாறு வற்புறுத் துகின்றனர். எனவே, இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சான்றி தழ்களை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுமென மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.

;