திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

img

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்களை வழங்கிடுக ஓய்வூதியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, செப். 16- தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் ஓய்வூதியர்களுக்கு மருத்து வப்படி உள்ளிட்ட பணப்பலன்களை உடனடியாக வழங்கிடக்கோரி, தமிழ் நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியளர்களுக்கு  மருத்துவக்காப்பீடு திட்டம் மற்றும் பஞ்சப்படி உயர்வு,  2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்க ளுக்கான பணபலன்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கான நிலுவைகள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். பென்சன் சீராய்வு குழுவின்  2009 ஆம் ஆண்டின் பரிந்துரையை அமலாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர்கள்  சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

 அதன்ஒருபகுதியாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி சிடிசி மேடு  பகுதியிலுள்ள போக்குவரத்து கழக  பணிமனைகள், இரயில்வே கூட்செட்  சாலை அருகே உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு ஓய்வூதி யர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,  போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் (சிஐடியு) கோவை மாவட்ட  பொறுப்பாளர்கள் ஜி.பழனிச்சாமி, ஆர்.சேதுராமன், அங்கமுத்து மற்றும்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி,கூடலூர் ஆகிய பகுதியில் உள்ள போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர் நல அமைப்பின் மண்டல நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கே.ராமன், பி.நாரா யணமூர்த்தி, யோகசசி, எஸ்.கே.ஆறு முகம், எம்.போஜன், அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்க மண்டல துணைப்  பொதுச்செயலாளர்கள் பி.கணே சன்,சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

;