மாவட்டங்கள்

img

நீட்தேர்வு மதிப்பெண் குளறுபடி மாணவன் புகார்

கோவை, அக்.18- நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்படுவதாக மாணவன் புகார் தெரி வித்துள்ளார்.  கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி யைச்  சேர்ந்த  மாணவர் மனோஜ். இவர், பீளமேடு நேசனல் மாடல் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில், கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு  எழுதி யுள்ளார். இதனைத்தொடர்ந்து, அக்.11 ஆம் தேதி தேர்வுக்கான முடிவுகளை  ஓ.எம்.ஆர் சீட்டில் பார்த்துள்ளார். அதில்  594 மதிப் பெண்கள என காட்டியுள்ளது. இந்நிலை யில், நேற்று வெளியான முடிவுகளில் 248 மதிப்பெண் மட்டும் வந்ததால் மாணவன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து புகார் அளிக்க  என்.டி.எ  டோல் ப்ரீ எண் ணில் தொடர்பு கொண்டால் முறையான பதில் இல்லை எனவும், இதுவரை  5 முறை மெயில் மூலம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என மனோஜ் தெரிவித்தார்.  மேலும், எனக்கு ரிய நியாயம் கிடைக்க வேண்டும். நீட் தேர்வு  முடிவுகளில் ஏற்ப டும் குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

;