திங்கள், அக்டோபர் 26, 2020

மாவட்டங்கள்

img

கலாச்சாரக் குழுவைக் கலைத்திடுக - கோவையில் முற்றுகைப் போராட்டம்

கோவை, செப். 30 - மத்திய அரசு அமைத்துள்ள கலாச் சாரப் பண்பாட்டுக் குழுவைக் கலைக்க வலியுறுத்தி கோவையில் திராவிடப் பண்பாட்டுக் கூட்டியக்கத்தினர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட் டனர்.

இந்தியப் பண்பாட்டின் தோற் றம், பரிமாணம் குறித்து மத்திய அரசு அமைத்த குழுவானது ஒற்றைக் கலாச்சாரம் என்கிற ஆர்எஸ்எஸ் சிந்தனையைத் திணிக்கும் உள்நோக் கத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை திரா விடப் பண்பாட்டுக் கூட்டியக்கத்தினர் முற்றுகையிட்டனர்.

ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட் டத்தில் கூட்டியக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர்கள் வெண்மணி, மலர வன், சாஜித், நேருதாஸ், இளவேனில் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.

முன்னதாக, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவ லகம் முன்பு இருந்து பேரணி துவங்கி பிஎஸ்என்எல் தலைமை அலுவல கத்தை முற்றுகையிடச் சென்றனர். இவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவ ரையும் கலைந்து போகச் செய்தனர்.

;