திங்கள், அக்டோபர் 26, 2020

மாவட்டங்கள்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்கிடுக உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் சிஐடியு கோரிக்கை மனு

பொள்ளாச்சி, அக்.18-  வால்பாறை தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 20  சதவிகிதம் போனஸ் வழங்கிடக்கோரி, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் சிஐடியு சங் கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.  இதுதொடர்பாக, தேயிலை தோட் டத் தொழிலாளர்கள், அலுவலர்கள்  (சிஐடியு) சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் பி.பரமசிவம் வெள்ளி யன்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;- வால்பாறை பகுதியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்களில் தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படை யிலும், நிரந்தர பணியாளர்களாகவும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பல ஆண்டுகளாக பணி புரிந்து வருகின்றனர்.  காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை வனவிலங்கு தொல்லை மற்றும் அட்டைப்பூச்சி கடி களிலும், மேடு, பள்ளங்களில் பாது காப்பற்ற சூழலில் பணிபுரியும் தேயி லைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி, குடிநீர், மின்சாரம், மருத்துவம் என எவ்வித பாதுகாப்பு வசதியும் இல்லை. ஆனால், ஆறு மாதத் திற்கு ஒருமுறை ரூ.800 வீதம் தொழில் வரியாக தொழிலாளர்களிடம் கட்டாய மாக வசூலிக்கப்படுகிறது. மேலும், தனியார் எஸ்டேட் நிர்வா கங்களில் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு 8.3 சதம் அல்லது சற்று கூடுதல் அளவிற்கு மட்டுமே போனஸ் வழங் கப்படுகிறது.

இதேபோல் மிகக்குறை வான ஊதியமே வழங்கப்படுகிறது. இது தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளிக்கிறது. ஆகவே, இந்தாண்டு முதல் அரசு தேயி லைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவது போன்று தனியார் தேயி லைத் தொழிலாளர்களுக்கும் 20 சதவிகித போனஸ் வழங்க வேண்டும்.   அருகிலுள்ள கேரள மாநிலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங் கப்படும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தை அனைத்து தொழிலாளர்க ளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாத ஊதியத்தை வேலை செய்யும் இடத்திலேயே கொடுக்க வேண்டும். பல தலைமுறையாக பணி புரியும் தொழிலாளர்களுக்கு குடி யிருப்புகள் வழங்க வேண்டும்.  வால் பாறை பகுதியில் தேயிலைத் தொழில் அல்லாத மாற்று தொழிலை கொண்டு வர வேண்டும். தேயிலைத் தொழிலா ளர்களுக்கு பிடித்தம் செய்யும் தொழில்வரி ரத்து செய்ய வேண்டும். எஸ்டேட் பகுதிகளில் மருத்துவமனை இல்லாததால் வால்பாறை அரசு மருத் துவமனையில் தரமான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

;