திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

img

மத பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்க முயற்சி சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் புகார்

கோவை, ஆக. 3 -  சாலையில் மக்கள் நம்பிக்கை சார்ந்த சின்னங்களை வரைந்து  திட்டமிட்டு கோவையில் கலவர சூழல் உருவாக்க முனைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு, மாதர், வாலிபர்,  மாணவர் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சி யர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் மனுக்கள் அளிக்கப் பட்டது.

இதுகுறித்து சிஐடியு மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.ராதிகா, மாவட்டப் பொருளாளர் ஜோதிமணி, சுதா, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி விவேகானந் தன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனு வில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் சில அமைப்பு கள் கலவர சூழலுக்கு திட்டமிட்டு கொண்டே இருக்கின்றனர்.

அவ்வப்போது காவல்துறையினர் தலையிட்டு நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது மீண்டும் சாலைகளில், சுவர்களில் வேல் சின்னம் வரைந்து வருகின்றனர். இதன்மீது மாற்று மதத்தவர்கள் கால் படவேண்டும் என்கிற கலவர சூழலுக்கு காத்துக்கிடப்ப தாய் தகவல்கள் வெளி வருகிறது.  இந்நிலையில், இஸ்லாமியர் ஒருவரின் இறைச்சி கடையின் சுவற்றில் வேல் சின்னம் வரையப்பட்டுள்ளது.

இதனை அழித்தால் கலவரத்தை உருவாக்குவார்கள் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் எங்களி டம் தெரிவிக்கிறார். ஆகவே திட்டமிட்டே இவ்வாறான செயல்களை சில அமைப்புகள் செய்து வருகிறது.  ஆகவே காவல்துறை மற் றும் மாவட்ட நிர்வாகம் எந்தவித பாரபட்ச முமின்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனு வில் கூறப்பட்டுள்ளது.

;