வெள்ளி, அக்டோபர் 30, 2020

மாவட்டங்கள்

துணை வட்டாட்சியர் உட்பட10 பேர் மீது வழக்குப்பதிவு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி

கோவை, அக். 17- கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை யினர் நடத்திய சோதனையில் கணக் கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து துணை வட்டாட்சியர் உட்பட10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கோவை பாலசுந்தரம் சாலையில் அடிந்துள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று தீடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.86 ஆயிரம் தொகை மற்றும் சில ஆவ ணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து அந்த அலுவலகத் தைச் சேர்ந்த ஒரு துணை வட்டாட்சி யர்,  இரண்டு வருவாய் ஆய்வாளர் கள், சர்வேயர், விஏஒ உதவியாளர், பதிவு எழுத்தர் என 7 அரசு ஊழியர்கள் மற்றும் ஒரு இடைத்தரகர், தற்காலிக அலுவலக உதவியாளர், தற்காலிக ஓட் டுநர் என 3 பேர் உட்பட மொத்தம் 10 பேர் மீது கோவை லஞ்ச ஒழிப்புத்துறை யினர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், தற் காலிக ஊழியர்கள் இருவரும் லஞ் சத் தொகையை பெற்று தருவதற்கா கவே, பணிக்கு அமர்த்தியிருந்தது தெரியவந்தது.  

அவிநாசி சார் பதிவாளர் அலுவலகம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட் டத்திற்கு உள்பட்ட சார்பதிவாளர் அலு வலகம் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரு கிறது. கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ளபோதும் அதனை பொருட்படுத்தாமல், சார்பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்பட்டு வந்தது. இந் நிலையில், வெள்ளியன்று வழக்கம் போல, அலுவலகம் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

மாலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தட் சணாமூர்த்தி தலைமையிலான குழுவி னர், சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அலுவலகப் பதிவேடுகள், கணக்கில் வாராத பணம் உள்ளிட் டவை குறித்து விசாரணை மேற் கொண்டனர். இதனால் அந்த அலுவல கத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

;