ஞாயிறு, அக்டோபர் 25, 2020

மாவட்டங்கள்

img

வேளாண் விரோத சட்டங்கள் -செப்.28ல் பெருந்திரள் போராட்டங்கள் திமுக தோழமைக் கட்சிகள் முடிவு

கோவை, செப். 24- மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத சட் டங்களை கண்டித்து செப்.28ல் பெருந்திரள் போராட்டங்களை நடத்துவது என திமுக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த் திக் எம்எல்ஏ தலைமையில்  தோழமை கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற் றது.  இந்த கூட்டத்தில்,   விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தை நசுக்கி டும் வகையில் 3 நாசகார மசோதாக் களை மத்திய நிறைவேற்றி உள் ளது.இதைக்கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செப்.28 ஆம் தேதியன்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி யின் பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், இதேபோல் மாநகர் கிழக்கு மாவட் டத்திற்கு உட்பட்ட 10க்கும் மேற் பட்ட இடங்களில் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சொத்து பாதுகாப் புக் குழு துணைத்தலைவர் பொங் கலூர் நா.பழனிச்சாமி, காங்கிரஸ் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநி லக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சிபிஐ மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மதிமுக இரா.சேது பதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநகரச் செயலாளர் தன பால், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் இலக்கியன், திராவிடர் கழ கத்தின் சிற்றரசு, மனிதநேய மக்கள் கட்சியின் ஜெம் பாபு, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பஷீர்,  ஆதி தமிழர் பேரவை ஜோதி முத்துக் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சாஜித், தமுமுக முஜிப்பூர் ரகு மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் கலைஞர் மாளிகையில் திமுக தோழமைக் கட்சிகளின் நிர் வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில், திமுக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் இரா.ராஜேந்திரன் எம்எல்ஏ, மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குண சேகரன், சிபிஐ மாவட்டச் செயலா ளர் மோகன், விடுதலை சிறுத்தை கள் கட்சி மாநகர் மாவட்டச் செய லாளர் ஜெயச்சந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயபிரகாஷ், மதிமுக செயலாளர் ஆனந்தராஜ் மற் றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம், கொங்குநாடு மக் கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட் டத்தில் மத்திய பாஜக அரசின் மக் கள் விரோத சட்டங்களை கண்டித்து செப்.28 ஆம் தேதியன்று பெருந் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தவது என முடிவு செய்யப்பட்டது.

;