திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

img

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்திடுக சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் கோரிக்கை

கோபி, ஆக. 7- இ-பாஸ் முறை மற்றும் சாலைவரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், கோபியில் சுற் றுலாவேன், கார் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நூற் றுக்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் ஜெயராமனி டம் மனு அளித்தனர்.  சுற்றுலாவேன், கார் ஓட்டுநர்கள் உரிமையாளர் கள் கோட்டாட்சியர் ஜெயராமனிடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது,

கொரோனா ஊரடங்கால் திருமணவிழாக்கள், சுற்றுலாதளங்கள் மற்றும் பண்டிகைகளில் அதிக அளவு மக்கள் கூடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளதால் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு வாடகை வண்டிகளில் செல்லும் வாடிக்கையாளர்கள் வெகு வாக குறைந்துள்ளனர்.

இதனால் சுற்றுலா வாகன ஓட் டுநர் உரிமையாளர்கள் ஏராளமானோர் வாழ்வாதா ரத்தை இழந்த தவித்து வருகின்றனர்.

எனவே, நடை முறையில் உள்ள இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;