மாவட்டங்கள்

img

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்திடுக

 பொள்ளாச்சி, ஜூலை 19-  பழைய ஆயக்கட்டு பாசனத் திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டி பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழி யார் பாசனத் திட்ட அலுவலகத் தின் முன்பு 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள் ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழி யாறு எனும் பிஏபி பாசன திட்டத் தின் மூலமாக பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு  பாசனத் திற்கும், தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலத்திற்கும் ஒப் பந்த அடிப்படையில் நீர் பகிர்ந்த ளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மே 15 ஆம் தேதி பொள்ளாச்சி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்தி ருக்க வேண்டும். ஆனால் தற் போது வரை தண்ணீர் திறக்கப் படவில்லை . இதனால் பிஏபி திட்டத்தை நம்பியிருந்த பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடி செய்ய முடியாமல்  கவலை அடைந்துள்ளனர். இதனால் வியா ழனன்று பொள்ளாச்சி பிஏபி திட்ட அலுவலகத்தை முற்றுகை யிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்  போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மே 15ம் தேதி இந்த ஆண்டிற்கான தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் மழை பருவம் மாறி போனதால்  இரண்டு மாதம் காலதாமதமாகி தற்போது வரை தண்ணீர் திறக்கப் படவில்லை. ஆனால் கேரளத் திற்கு மே 15ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டு வழங்கப்பட்டு வரு கிறது . கேரளத்திற்கு எப்போதெல் லாம்           தண்ணீர் வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும். இது எங்களது பாரம்பரிய உரிமையா கும். ஆனால் தற்போது வரை தண்ணீர் திறக்காததால் முதல் போக சாகுபடி பாதிக்கப் பட்டுள்ளது என்று கூறினார். இதனைத் தொடர்ந்து தண் ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு பொறியாளர் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது.

;